- டூரில் கலந்து கொள்ள நபர் 1க்கு ரூ. 25,000 அல்லது கம்பெனி நிர்ணயித்த முன் பணம் ரொக்கமாகவோ டிராப்ட் மூலமாகவோ செலுத்தி பெயரைப் பதிவு செய்து கொள்ள வேண்டும்.
- விசா கிடைத்த பிறகுதான் உங்கள் பயணம் உறுதியானதாக ஆகும். அதன் பிறகு பயணத்திற்கு உண்டான முழு தொகையும் செலுத்துபவர்கள் மட்டுமே பயணிகளாக கருத முடியும். முன் பணம் செலுத்தியபிறகே பயணிகள் என்கின்ற உரிமை உங்களுக்கு கிடைக்கிறது.
- உங்களுடைய பயணத் தொகையை ரூபாயாக நிர்ணயித்தாலும் நமது வெளிநாட்டு பயணத்திற்கு உண்டான செலவை டாலரில்தான் செலுத்த வேண்டும். நமது ரிசர்வ் பாங்க் உங்களுக்காக அனுமதிக்கும் 2000 டாலரில் எங்களுக்கு தேவையான தொகையை உங்கள் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும்.
- விசா வழங்குதல் அந்தந்த நாட்டு தூதரகத்தின் முடிவே. தேவையான ஆவணங்களை எங்களது அறிவுரைப்படி சமர்பித்தல் மிகவும் அவசியமாகும். தவறும்பட்சத்தில் தூதரகத்தின் முடிவில் நாங்கள் (Raja's Mayura Vacations) தலையிட முடியாது.
- விசா வராத நிலையில் விசா சர்வீஸ் சார்ஜ் ரூ. 5000/- மட்டும் ரத்து கட்டணமாக எடுத்துக் கொள்ளப்படும். ஐரோப்பிய, அமெரிக்க, ஜப்பான், ஆஸ்திரேலியா போன்ற பெரிய நாட்டு சுற்றுலாக்களுக்கு சர்வீஸ் சார்ஜ் ரூ. 5000 + விசா கட்டணம் + விமான ரத்து கட்டணம் அன்றைய தேதியில் + ஹோட்டல் ரத்து கட்டணமும் வசூலிக்கப்படும்.
- விசா பெறப்பட்ட பின் நாங்கள் உங்களுக்காக அனைத்து இடங்களுக்கும் பணம் செலுத்தி விடுவோம். அந்த சூழ்நிலையில் நீங்கள் பயணத்தை ரத்து செய்தால் விமான டிக்கெட் ரத்து கட்டணம், ஹோட்டல் கேன்சல் செய்தால் முழுத் தொகையும் ரத்து கட்டணமாக வசூலிக்கப்படும், 100% Cancellation applicable if Cancel 0 to 25 days from the departure date
- நமது பயணத்திட்டம் நீங்கலாக வசதியையும் நேரத்தையும் பொறுத்து மேலும் சில விசேஷமான இடங்களை பார்க்கவும் ஏற்பாடு செய்யப்படும். அந்த செலவுகளை சக பயணிகள் எல்லோரும் பகிர்ந்து கொள்ளவேண்டும்.
- சர்வதேச ஹோட்டல்களில் அறை கொடுக்கும் நேரம் (Check in time) பிற்பகல் 3:00 மணி, அறையை காலி செய்யவேண்டிய நேரம் பகல் 12:00 மணி அதை ஒட்டியே பயண திட்டங்கள் அமைக்கப்படும்.
- இயற்க்கை, சந்தர்ப்பம் மற்றும் எதிர்பாராத சூழ்நிலைகள் கஷ்ட, நஷ்டங்களுக்கு Raja's Mayura Vacations பொறுப்பல்ல.
- சுற்றுலாவின் சமயம் எதிர்பாராதவிதமாக வினமானங்கள் ரத்து செய்யப்பட்டால் அல்லது தாமதம் செய்யப்பட்டால் பிரயாணிகளுக்கு ஏற்படும் கஷ்டநஷ்ட்டங்களுக்கு Raja's Mayura Vacations பொறுப்பல்ல.
- எந்த விமானங்களில் புக் செய்வது என்பது எங்களது தனிப்பட்ட உரிமையாகும்.
- எங்களது சுற்றுலாக்களில் குறைந்த பட்சம் 20 நபர்கள் சேர்ந்தால் மட்டுமே நடத்தப்படும் அல்லது அடுத்த புறப்படும் தேதிக்கு சுற்றுலா தேதி ஒத்திவைக்கப்படும். இதனால் ஏற்படும் கஷ்ட நஷ்டங்களுக்கு Raja's Mayura Vacations பொறுப்பல்ல.
- சுற்றுலா புறப்படும் 7 நாட்களுக்கு முன்பாக மட்டுமே தாங்கள் பயணம் செய்யும் விமானங்கள், தங்கும் ஹோட்டல்கள் விபரம் அடங்கிய விபர அறிக்கை அளிக்கப்படும்.
- சுற்றுலா புறப்படும் 30 தினங்களுக்கு முன்பாக சுற்றுலா கட்டணம் முழுவதையும் செலுத்தி விடவேண்டும்.
- சுற்றுலா புறப்படும் 20 தினங்களுக்குள் முழு கட்டணம் செலுத்தவில்லையெனில் தங்கள் முன்பதிவு ரத்து செய்யப்பட்டதாக கருதப்படும்.
- சுற்றுலாவின் சமயம் எக்காரணத்திற்காகவும் தாங்கள் ஊர் திரும்ப விரும்பினால் தங்கள் சொந்த செலவிலேயே திரும்பிக் கொள்ளவேண்டும்.
- சுற்றுலாவின் சமயம் எக்காரணத்திற்காகவும் பிரயாணம் செய்யும் வாகனங்களை / குழுவை தவற விடுபவர்கள் தங்கள் சொந்த செலவிலேயே அடுத்து நமது குழுவினருடன் / வாகனங்களுடன் சேர்ந்து கொள்ளவேண்டும்.
- உங்கள் ஹோட்டல் அறைகளின் சாவியை பத்திரமாக வைத்திருந்து, ஹோட்டல் அறையை காலி செய்யும் பொழுது சாவியை உங்களுடைய டூர் மனேஜரிடம் ஒப்படைக்கவும்.
- சுற்றுலாவின் சமயம் தங்களது சக பயணிகளை அனுசரித்து சுற்றுலா மகிழ்ச்சிகரமாக அமைய உதவுங்கள்.
- சுற்றுலாவின் சமயம் அனைவரும் ஒரே குழுவாக இருக்கவேண்டும். எங்கு சென்றாலும் உங்களுடைய டூர் மனேஜரிடம் முன்கூட்டியே தெரிவித்துவிட்டு செல்லவும். ஹோட்டல் அறைகளில் துணிகள் துவைக்கக் கூடாது.
- இயற்க்கை, சந்தர்ப்பம் மற்றும் எதிர்பாராத சூழ்நிலைகள் கஷ்ட, நஷ்டங்களுக்கு Raja's Mayura Vacations பொறுப்பல்ல.
- சுற்றுலாவின் சமயம் இயற்க்கை மற்றும் வேறு காரங்களுக்காக தாங்கள் செல்லவிருக்கும் விமானங்கள் / கப்பல்கள் / வாகனங்கள் ரத்து செய்யப்பட்டாலோ அல்லது தாமதமாக செயபட்டாலோ பிரயாணிகளுக்கு ஏற்படும் கஷ்ட, நஷ்டங்களுக்கு Raja's Mayura Vacations பொறுப்பல்ல.
- சுற்றுலா சமயம், சுற்றுலா திட்டத்தை மாறுதல் செய்ய எங்களுக்கு முழு உரிமை உண்டு.
- சுற்றுலாவின் அனைத்து சமயங்களிலும் சுற்றுலா மேலாளரின் ஆலோசனைப்படி நடந்து கொள்ள வேண்டும்.
- உங்களிடம் இருந்து விசா பெறுவதற்காக பெறப்படும் உங்களது பாஸ்போர்ட் மற்றும் டிக்கெட்டுகள் சுற்றுலா புறப்படும் 3 (மூன்று) தினங்களுக்கு முன்பிருந்து எங்களது அலுவலகத்தில் பெற்றுக் கொள்ளலாம். அல்லது விமான நிலையத்தில் புறப்படும் தினமன்று சுற்றுலா மேலாளரிடம் பெற்றுக் கொள்ளலாம்.
- தங்களுக்கு தங்களின் விமான டிக்கெட்டுகள், பாஸ்போர்ட், விசா, முன்பே தேவைப்படின் கீழ்க்கண்டவைகள் சேவை கட்டணங்களாக வசூலிக்கப்படும்.
- பாஸ்போர்ட் கொரியர் செய்ய ரூ. 400
- டிக்கெட் காப்பி கொரியர் செய்ய ரூ. 150
- விசா காப்பி கொரியர் செய்ய ரூ. 150
மேற்கண்ட அனைத்தும் எங்கள் அலுவலகத்தில் சுற்றுலா புறப்படும் 3 (மூன்று) தினங்களுக்கு முன்பிருந்து எவ்வித கட்டணமின்றி பெற்றுக் கொள்ளலாம்.
மேற்கண்ட அனைத்து நிபந்தனைகளுக்கும் ஒப்புக் கொண்டு, சுற்றுலா திட்டத்தை நன்கு படித்து புரிந்து கொண்டு, சுற்றுலா வரவில்லை எனில் வசூலிக்கப்படும் ரத்து கட்டணங்களை அறிந்து கொண்டு Raja’s Mayura Vacations-ன் இந்த சுற்றுலாவில் கலந்து கொள்கிறேன் என மனப்பூர்வமாக உறுதிகூருகிறேன்.